உங்களுக்கு மேனஸ் தெரியாதா? நெப்போலினை அசிங்கப்படுத்தினரா விஜய் ? வைரலாகும் வீடியோ.

0
3975
nepolean
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் நெப்போலியனும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Gajan on Twitter: "#Thalapathy #Vijay #Pokkiri shooting spot UHD ...

- Advertisement -

தற்போது இவர் தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஹாலிவுட் படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் நெப்போலியனை பிரபல நடிகர் ஒருவர் அவமானப்படுத்தியதாக சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது. இது குறித்து பிரபல சேனலில் பேசப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பது, நடிகர் நெப்போலியன் அவர்கள் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர். இவர் அமைச்சராக கூட பதவி வகித்திருக்கிறார்.

சமீபகாலமாக இவருடைய படங்கள் வெளிவரவில்லை. தற்போது இவரை குறித்து சர்ச்சையான நியூஸ் சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிரால் அவமானப்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. நெப்போலியன் அந்த பிரபலமான நடிகர் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

பிரபலமான நடிகரை பார்ப்பதற்காக நெப்போலியன் நண்பர்கள் கேட்டுள்ளார்கள். நெப்போலியனும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் தான். நானே உங்களை அவரிடம் அறிமுகப்படுத்தி போட்டோ எடுக்க வைக்கிறேன் என்று கூறி அவர்களை நெப்போலியன் அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது அந்த நடிகர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். பின் அந்த நடிகர் கேரவனில் இருப்பதை அறிந்து கொண்டு நெப்போலியன் தன் நண்பர்கள் உடன் கேரவனுக்கு சென்றார்.

திடீரென்று நடிகர் நெப்போலியன் கேரவன் கதவை திறக்க முயன்றபோது அங்கு வெளியே இருந்த பாதுகாவலர் ஏன் இப்படி செய்கிறீர்கள்? சார் இடம் அனுமதி இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. சார் உங்களை வரச் சொன்னாரா? என்று நெப்போலியன் இடம் பேசியுள்ளார். பிறகு நெப்போலியனுக்கும் அந்த கேரவன் காவலருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. உடனே அந்த நடிகர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். அவர் தனக்கு தான் ஆதரவாக பேசுவார் என்று நெப்போலியன் நினைத்தார்.

ஆனால், அந்த நடிகர் நெப்போலியனை பார்த்து ‘உங்களுக்கு மேனஸ் தெரியாதா? நீங்க பாட்டு வந்து கதவைத் திறப்பீர்களா? என்று கேட்டுள்ளார். இதனால் நெப்போலியனுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்து அவர் தன் நண்பர்களை கூட்டிட்டு சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். மேலும், நடிகர் நெப்போலியன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் எஜமான், கமலஹாசனின் விருமாண்டி படத்திலும் நடித்துள்ளார்.

அதேபோல் தளபதி விஜயின் 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த போக்கிரி படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இதில் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தா இருக்குமோ? கமலஹாசன் இருக்குமோ? விஜய்யாக இருக்குமோ? என்றும் கூறி வருகிறார்கள். அந்த நடிகர் யாராக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ கீழே கமென்ட் செய்யுங்கள்.

நெப்போலியன் ‘கிறித்துமஸ் கூப்பன் ‘ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேத்யூஸ், இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.

Advertisement