இந்தியன் 2 படத்தில் கமலுக்கு 7 வில்லன்களா? யார் யார் தெரியுமா?

0
438
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. அப்போது கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து:

அதே சமயம் நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் எப்போ தொடங்கப்படும்? என்ற கேள்வி எழுந்தது.

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2:

சமீபத்தில் சங்கர் அவர்கள் பேட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறி இருந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மேலும், இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். தற்போது விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் தான் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

7 வில்லன்கள் :

இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அவர்களின் சமுத்திரக்கனி. மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர், ஜெயப்பிரகாஷ், குரு சோமசந்திரம் போன்ற 7 நடிகர்கள் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. மேலும் இந்தியன் 2 படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றும் இதுவரையில் பார்த்திடாத வகையில் சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement