7g ரெயின்போ காலனி படத்தின் டெலீட் செய்யப்பட்ட காட்சி – ரவிகிருஷ்ணா பகிர்ந்த செம பதிவு.

0
3756
ravi
- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் இளசுகள் மத்தியில் இந்த படம் பெரிதும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ரவிகிருஷ்ணா. இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் எம் ரத்னத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இந்த படத்தினை அவரே தயாரித்து இருந்தார்.

-விளம்பரம்-

தனது முதல் படத்திலேயே 2004 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பெற்றவர் ரவிகிருஷ்ணா.அதன்பின்னர் சில தமிழ் படங்களிளும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார் ரவி. கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடித்தார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போக தனது பிஸ்னஸ்சில் ஆர்வமாக இறங்கி வேலை செய்து வந்தார்.

- Advertisement -

மேலும் படங்களில் நடிக்காததால் அவரது உடல் பருமனும் கூடியது. பார்க்கும்போது இது ரவிகிருஷ்ணவா என்று ஆச்சரியபடுத்தும் வகையில் உள்ளது. செல்வராகவன் அறிமுகம் செய்த நடிகைகளில் சோனியா அகர்வாலும் ஒருவர்.காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதன் பின்னர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் செய்து கொண்டார்.

செல்வராகவன் இயக்கிய ‘7 ஜி ரெயின்போ காலனி ‘ திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்தில் இடம்பெறாத காட்சியின் புகைப்படம் ஒன்றை ரவி கிருஷ்ணா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement