8 ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா வைரஸ் பற்றி எச்சரித்துள்ள நபர் – தற்போது வைரலாகும் ட்வீட்.

0
1064
corona
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதிகள் , மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்,” என்று கூறினர்

- Advertisement -

இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் அமெரிக்கா, பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. அதே போல உலக நாடுகள் மீது சீன தொடுத்த பயோ ஆயுதம் தான் இந்த கொரோனா வைரஸ் என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா வைரஸ் 2019 – ல் தான் உருவானது, அதனால் தான் இதற்கு கோவிட் -19 என்று பெயர் வைத்தன. இப்படி ஒரு நிலையில் கொரோனா வைரஸ் பற்றி கடந்த 2013ஆம் ஆண்டே, அதாவது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த டீவீட்டில் அவர் ‘கொரோனா வைரஸ் வருகிறது’ என்று ட்வீட் செய்துளளார்.

-விளம்பரம்-

அந்த டீவீட்டை தற்போது பலரும் ரீ- ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், 8 ஆண்டுகளுக்கு முன்பே இவர் எப்படி கொரோனா வைரஸ் பற்றி ட்வீட் செய்தார் என்று பலரும் வியந்து போயுள்ளனர். மேலும், ஒரு சிலரோ, கொரோனா வைரஸ் ஒன்றும் புதிதான வைரஸ் இல்லை என்றும் அது பல ஆண்டுக்கு முன்னரே இருந்துள்ளது, தற்போது மீண்டும் அது பரவி வருகிறது என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement