திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பிரியா கர்ப்பம் – புகைப்படத்துடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ்.

0
872
- Advertisement -

திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு பிரியா அட்லீ கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

- Advertisement -

அட்லீ திரைப்பயணம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அட்லீ – ப்ரியா திருமணம்:

இதனிடையே அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார்

-விளம்பரம்-

ப்ரியா- அட்லீ குறித்த தகவல்:

திருமணத்திற்கு பின் பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால், ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன் கணவருடன் எடுக்கும் போட்டோ, வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் கூட இவர் திருமண நாள் கொண்டாடி இருந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அட்லி அவர்கள் ஒரு சந்தோஷமான செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.

ப்ரியா கர்ப்பம்:

அதாவது, தான் அப்பாவாகிய தகவலை தான் அட்லீ பகிர்ந்திருக்கிறார். பிரியா மற்றும் அட்லி இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. தற்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதை தான் அட்லி சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார். அதில் அவர், “Happy to announce that we are pregnant need all your blessing and love. Wit love – Atlee & Priya” என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement