1983 உலக கோப்பை வீரர்களுக்கு 83 படக்குழு எத்தனை கோடி கொடுத்துள்ளது தெரியுமா ? இவர் ஒருவருக்கு மட்டும் 5 கோடி. ஸ்வாரஸ்ய காரணம்

0
455
83
- Advertisement -

 சினிமா மற்றும் கிரிக்கெட் இரண்டிற்கும் ஒரு வலுவான பந்தம் இருந்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி இருகிறது. அதே போல அசாருதீன், சச்சின், தோனி என்று பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகவும் வந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற அந்த தருணத்தை கருவாக வைத்து அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 83. பிரபல பாலிவுட் ஹீரோவான ரன்வீர் சிங் இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோன்று தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு :

அன்மையில் வெளியான இந்த 83 படத்திற்கான ட்ரெய்லர் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.கடந்த பல மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இத்திரைப்படமானது நேற்று வெளியாகிய நிலையில் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தினை காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

முன்னாள் வீரர்களுக்கு 15 கோடி :

இவ்வேளையில் 1983-ஆம் ஆண்டு உலககோப்பை அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு 83 படக்குழு சார்பாக சுமார் 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் கபில் தேவுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

83: The story behind India's greatest win

உரிமை தொகை :

இப்படி இந்த உலககோப்பை அணிக்கு பதினைந்து கோடி ரூபாய் வழங்கப்பட என்ன காரணம் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான தகவலில் கூறப்பட்டதாவது ‘உண்மைக்கதையை தழுவி இந்த திரைப்படம் உருவான காரணத்தினால் அந்த கதாபாத்திரங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கான உரிம தொகையை வழங்க வேண்டும்.

-விளம்பரம்-

கபில் தேவ்க்கு மட்டும் 5 கோடி ஏன் :

அப்படித்தான் 83 திரைபடக்குழு சார்பாக இந்த தொகையானது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி மொத்த அணிக்கும் 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள வேளையில் இத்திரைப்படத்தில் அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள கபில் தேவ் கதாபாத்திரத்திற்காக அவருக்கு அதிகபட்சமாக 5 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வசூலை பெரும் 83 :

‘83’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 முதல் 14 கோடி என்று கூறப்படுகிறது. இது ‘சூர்யவன்ஷி’, ‘ஸ்பைடர்மேன்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூலோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது இந்தியாவில் ‘ஒமைக்ரான்’ தொற்று அதிகரித்து வருவதால் ஒரு சில மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் வசூலில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement