படம் தயாரித்து சொத்துக்களை இழந்த ஜெயமாலினி .! வாழக்கையில் நடந்த சோகம்.!

0
4211
- Advertisement -

இருந்தா ராஜா இல்லைனா கூஜா இது தான் சினிமா துறை. சினிமாவில் கொடிகட்டி பரந்த பல்வேறு நடிகர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால், பிரபல நடிகை ஜெயமாலினியின் கதை மிகவும் சோகமானது.

-விளம்பரம்-

1970 மற்றும் 80 காலகட்டங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை ஜெயமாலினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

எனது அப்பா ஒரு தயாரிப்பாளர். அவர் படம் எடுத்து சொத்துக்களை கரைத்ததால் வீட்டை விற்கும் நிலை இருந்தது.
அதனால் எனது அக்காள் ஜோதிலட்சுமியும் நானும் நடிக்க வந்தோம். விட்டலாச்சாரியாவின் ஜெகன் மோகினி பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. கவர்ச்சியாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு உள்ள முக்கியத்துவம் எனக்கும் இருந்தது. நிறைய காதல் கடிதங்கள் வந்தன.

கவர்ச்சியாக ஆடியதால் வெளியில் யாரும் என்னை குறைவாக மதிப்பிடவில்லை. இப்போது நிலைமைகள் மாறி இருக்கிறது. அன்றைக்கு நாங்கள் கவர்ச்சி நடனம் ஆட அணிந்த உடைகளை இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement