விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் மியூசிக் ஷோவில் 90ஸ் தொகுப்பாளர்கள் பங்கேற்று இருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில காலமாகவே மக்களின் ஃபேவரைட் சேனலாக விஜய் டிவி திகழ்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் சேனலாக விஜய் டிவி உள்ளது.
குறிப்பாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் ஷோ மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களை பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கினார். அதற்குப் பின் மூன்றாவது சீசனை தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார்.
ஸ்டார்ட் மியூசிக்:
அதனைத் தொடர்ந்து தற்போது வரை பிரியங்கா தான் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். இசையை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டு பிரபல அணிகள் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பல்வேறு இசை அடிப்படையிலான விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் சவுண்ட் பார்ட்டி, பயாஸ்கோப் மற்றும் ஒழுங்கா பாடு இல்லனா ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என மூன்று இசை தொடர்பான விளையாட்டுகள் உள்ளன.
சிறப்பு போட்டியாளர்கள்:
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள். வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை உள்ள பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் போட்டியாளர்களாக 90s கிட்ஸ் ஃபேவரைட் தொகுப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
90 s ஃபேவரைட் ஆன்கர்ஸ்:
அதாவது 1990 கால காலங்களில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம்பெற்ற தொகுப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில், விஜய சாரதி, சுரேஷ் சக்கரவர்த்தி, அம்மு ரவிச்சந்திரன், பிரியதர்ஷினி, மமதி சாரி, விஷாலாட்சி ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தொகுப்பாளர்கள் எல்லாம் அவர்கள் பணியாற்றிய காலத்தில் நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதத்தை கண்டிப்பாக நம்மால் எப்போது மறக்க முடியாது. அந்த அளவிற்கு தங்கள் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு, யாரும் முகம் சுளிக்காத வகையில் மக்களை மகிழ்விப்பார்கள்.
தற்போதைய நிலைமை:
ஆனால் இன்றைய காலகட்டத்தில், டிவி சேனல்கள் ஒன்று அல்லது இரண்டு தொகுப்பாளர்களை வைத்து எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி விடுகிறார்கள். மேலும், 90ஸ் காலகட்டத்தில் தொகுப்பாளர்களைப் போல் தற்போது உள்ளவர்கள் மக்கள் மனதில் பெரிதாக இடம்பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது 90ஸ் தொகுப்பாளர்கள் இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிந்த 90ஸ் கிட்ஸ் மற்றும் ரசிகர்கள் இந்த ஷோவின் ஒளிபரப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு விஜய் டிவிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.