தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இப்படி ஒரு நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு காரணமாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் பிரபல நட்சத்திர தம்பிதிகளின் மகளும் 96 பட நடிகையுமான நியதி.

தேவதர்ஷினி அவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர். இவர் டிவி சீரியலில் துவங்கி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும்,தேவதர்ஷினி அவர்கள் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவதர்ஷினி பேசுகையில், மெர்சல் படத்தில் நான் நடித்து இருந்தேன். ஆனால், என்ன ? காரணம் என்று தெரியவில்லை, எடிட்டிங் செய்யும் போது நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள். ஆனால், இந்த முறை அப்படி நடக்காது என்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் கூறியிருந்தார். மேலும்,விஜய் அவர்கள் என் மீது இவ்வளவு அக்கறை வைத்து கேட்டது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

Advertisement

அதோடு அவர் உரிமையாக என்னை “அக்கா” என்று கூப்பிட்டது எனக்கு வானத்தில் பறந்தது போல இருந்தது. மேலும், என்னுடைய மகள் நியதி விஜய் அவர்களின் ரொம்ப பெரிய ரசிகை. நானும் தான் அவரோட ரசிகை. முதல் நாள் பிகில் பட சூட்டிங்கில் நம்ம தளபதி விஜயுடன் எப்படியாவது போட்டோ எடுக்க வேண்டும்ன்னு என் மகள் நியதி ஷூட்டிங்க்கு என்னுடன் வந்து இருந்தால். ஆனால், ஷூட்டிங் நேரத்தில் விஜய் அவர்கள் ரொம்ப பிஸியாக இருந்ததால் அவருடன் போட்டோ எடுக்கவில்லை.

நானும், சரின்னு சொல்லிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன். திடீரென்று விஜய் அவர்கள் என் முன்னால் வந்து நின்று, நீங்கள் நடித்த ” 96″ படத்தை பார்த்தேன். உங்களை விட உங்கள் மகள் நடிப்பு சூப்பராக இருந்தது என்று கூறினார். இதை கேட்டவுடன் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு பத்து நிமிடம் நியதியும் ,விஜய் அவர்களும் பேசி இருப்பார்கள். என் மகளுக்கு பிகில் படத்தின் புட்பால் டீம் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பத்தாவது பரீட்சை இருந்ததால் அவளால் நடிக்க முடியல. அதோடு இந்த படத்தில் என் மகள் நடிக்க முடியாதது ரொம்ப வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement