-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

தனது மகன் விட்டதை பிடித்த பேத்தி – சால்வை அனுவித்து பாராட்டு தெரிவித்த பாரதிராஜா

0
762

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி இயக்குனராகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி -நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது.

பாரதிராஜா திரைப்பயணம்:

அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், தமிழ்`சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். இவருடைய மாணவர்களான பாக்யராஜ், பாண்டிராஜ் முதலான பல பேர் தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக இருந்தனர். அதோடு பல முன்னணி இயக்குனர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் பாரதிராஜா.

பாரதிராஜா குறித்த தகவல்:

-விளம்பரம்-

இவரின் படைப்புக்காக ஆறு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். இதனிடையே இவர் தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகன் மனோஜை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார்.

-விளம்பரம்-

பாரதிராஜா பேத்தி:

கடந்த ஆண்டு இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்துஇருந்தார். இந்த நிலையில் பாரதிராஜாவின் பேத்தி இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரதிராஜாவின் பேத்தியும், மனோஜின் மகனுமாக இருப்பவர் மதிவதனி. இவர் தான் பயிலும் பள்ளிக்காக குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

அந்த குறும்படத்தில் பாரதிராஜாவையும் நடிக்க வைத்திருக்கிறார். இளம் வயதிலேயே தன்னுடைய பேத்தியின் இயக்குனர் திறமையை பார்த்து பாரதிராஜா வியந்து போய் அவரை நேரில் அழைத்து பாராட்டியது மட்டும் இல்லாமல் பொன்னாடை போர்த்தி வாழ்த்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதை பார்த்த பலருமே மதிவதனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news