‘ அமைச்சர் மனைவி ஒருவரிடம் கேட்டேன். பெண் பிள்ளைகளுக்கு எப்பொழுதம்மா திருமணம்?என்று’ – திருமணம் குறித்து வைரமுத்து போட்ட பதிவு வைரல்.

0
248
- Advertisement -

திருமணம் குறித்து வைரமுத்து பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இதற்கு பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

வைரமுத்து சொன்ன சர்ச்சை கருத்து:

இருந்தாலும், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வைரமுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. இசையும், பாடல் வரிகளும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும்.

chinmayi

வைரமுத்து குறித்த கண்டனம்:

சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது. இசையை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கங்கை அமரன், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி போல அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது. சாருடன் ஹாஸ்பிடலில், வீட்டில் என எல்லா இடத்திலும் அவருடனே இருந்தது செந்தில் தான்.

-விளம்பரம்-

கங்கை அமரன் பதிவு:

அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரை இருந்திருக்காது. அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வைரமுத்து பதிவு:

இந்த நிலையில் தற்போது வைரமுத்து டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்,

என் மதிப்புக்குரிய
அமைச்சர் ஒருவரின்
மனைவியிடம் கேட்டேன்

‘பெண் பிள்ளைகளுக்கு
எப்பொழுதம்மா திருமணம்?’

அவர் முகத்தில் – ஒரு
வாடிய புன்னைகை
ஓடி உடைந்தது

‘சமகாலத்தில்
திருமணமான சகபெண்களின்
வாழ்க்கையைப்
பார்த்துப் பார்த்துத்
திருமணம் என்றதும்
அஞ்சுகிறார்கள் அண்ணா’
என்றார்

இந்தக் குரலை
நான் பரவலாகக் கேட்கிறேன்
நிகழ்காலத் தலைமுறையின்
விழுமியச் சிக்கல் இது

ஒன்று
திருமண பந்தத்தின்
ஆதி நிபந்தனைகள்
உடைபட வேண்டும்
அல்லது
திருமணம் என்ற நிறுவனமே
உடைபடுவதை
ஒப்புக்கொள்ள வேண்டும்

ஒரு யுக மாற்றத்திற்குத்
தமிழர்கள் அல்ல அல்ல
மனிதர்கள் தங்கள் மனத்தைத்
தயாரித்துக்கொள்ள வேண்டும்

சமூகம் உடைந்துடைந்து
தனக்கு வசதியான
வடிவம் பெறும் –
கண்டங்களைப்போல என்று கூறி இருக்கிறார்.

Advertisement