2017 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள ஓக் என்ற இடத்தில் இருந்து பெய்ட் தீவை இணைப்பதற்கு கேபிள் பாலம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.979 கோடி செலவில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட, நாட்டின் மிக நீளமான CABLE பாலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், துவாரகா நகரத்தின் ஆழ்கடல் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தண்ணீரில் தவம் செய்தார்.
துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீகமான அனுபவம் என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி இதனை விமர்சிக்கும் வகையில் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் மோடி தியானம் செய்யும் புகைப்படம் ஒன்றையும் கடலுக்கு அடியில் பூஜை செய்த புகைப்படத்தையும் பதிவிட்டு ‘தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்!
நிர்வாகத்தைத் தவிர எல்லா வசியங்களையும், அனாவசியங்களையும் செய்து சுயசிந்தனையற்றக் கூட்டங்களை எப்படி ஏமாற்றுகிறார்! அந்தப் பரிதாபத்திற்குரியக் கூட்டத்தினரால் இந்தப் பெருமைமிகுந்த தேசம் அல்லலுறுகிறது’ என்று பதிவிட்டுள்ளார். அதே போல் மோடியை விமர்சித்த ஒரு பதிவு ஒன்றையும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில் ‘எப்பேர் பட்ட கோமளித்தனங்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது …
இதற்கு முன்பு எந்த பிரதமரும் இப்படிப்பட்ட எந்த ஏமாற்று மாய வித்தைகளையும் செய்யவில்லை, செய்ய வேண்டிய அவசியமில்லை, தேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிரதமருக்கு இப்படிப்பட்ட வேலைகளுக்கு நேரம் இருக்காது…..மதத்ததை அடிப்படையாக கொண்டு ஆட்சிக்கு வந்வர்கள் என்ன செய்வார்கள்? அந்த மதத்தில் இருக்கும் முட்டாள்களுக்கு தீனி போட்டு கொண்டே இருக்க வேண்டும் ..
அதற்கு பல குரங்கு வித்தைகளை செய்துக் காட்டி கொண்டே இருக்க வேண்டும் … இந்து புராணங்களில் பல்வேறு விதமான அறிவியலுக்கு அப்பாற்பட்ட முட நம்பிக்கைகள் இருக்கும் அது செய்வதன் மூலம் கடவுளிடமிருந்து வரம் கிடைக்கும் . உதாரணமாக , அர்ஜுனன் ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவமிருந்து பரசுராமரின் வரம் வாங்கினான் .. குந்தி சூரியனை கணவனாக நினைத்து வணங்கி தன் வயிற்றில் கரு வளர வேண்டும் என்று கேட்க கர்ணன் பிறந்தான் ..
ஆழ்கடலில் இருந்த பாம்பை அடக்கி அதன் தலையின் மீது கிருஷ்ணன் டாண்ஸ் ஆடினார் … இப்படிபட்ட புராண கதைகளுக்க உயிர் கொடுத்து ஓட்டு வாங்க ஆசைப்படுகிறார் பிரதமர் … ஆழ்கடலில் கடவுளை வணங்க யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எந்த அறிவியல் உபகரணமும் இல்லாமல் மூன்று நிமிடம் உள்ளே இருக்க முடியுமா ? இதற்க்காக செலவிடப்பட்ட தொகை?
எத்தனை ஆட்கள் மெனக்கெட்டு இருக்க வேண்டும் ? பிடித்துக்கொள்ள மூன்று பேர், போட்டோ எடுக்க நான்கு பேர் , பாதுகாப்புக்கு 10பேர் கடலுக்கு வெளியே எத்தனை பேர் ?? அறிவியல் இவ்வளவு முன்னேறிய பிறகும் இத்தனை கோமளித்தனங்களை இவர்களால் செய்ய முடிகிறது என்றால், மதத்தை கண்மூடித்தனமாக நம்பும் மக்களால் ஏற்படும் காட்சிகள் இவை’ என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.