‘ராயன்’ படம் பார்த்த போது ஏற்பட்ட தகராறு – அநியாயமாக முடிந்த இளைஞரின் வாழ்க்கை

0
251
- Advertisement -

‘ராயன்’ படம் பார்த்தபோது ஏற்பட்ட தகராறால், நிகழ்ந்திருக்கும் கொலை சம்பவம் குறித்து தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ராயன் பட செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் மிகப் பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். தற்போது தனுஷ், ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இது இவரின் 50வது படமாகும்.

-விளம்பரம்-

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் துஷரா விஜயன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே,சூர்யா, அபர்ணா பால முரளி, சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

ராயன் பார்க்கும்போது ஏற்பட்ட தகராறு:

சமீபத்தில் ‘ராயன்’ படம் பார்த்தபோது ஏற்பட்ட தகராரில், தியேட்டருக்கு வெளியே வந்து கும்பல் அரங்கேற்றி இருக்கும் கொலை சம்பவம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் சிராஜ். இவர் ஓட்டேரி மேம்பாலம் அருகில் உள்ள கார்ப்பரேஷன் கட்டிடத்தில், பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் விசாரணை தொடங்கிய உடனே கொலையாளிகள் போலீசில் சரண் அடைந்துள்ளார்கள்.

கொலைக்கு காரணம்:

ஓட்டேரி பகுதியை சேர்ந்த இம்ரான் மற்றும் முகமது கலீம் போலீஸில் சரணடைந்துள்ளார்கள். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், உயிரிழந்த சிராஜ் ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரில் ‘ராயன்’ திரைப்படம் பார்க்கச் சென்று இருக்கிறார். அப்போது சிராஜின் பின் வரிசையில் உட்கார்ந்து இம்ரானும் முகமது கலீமும் படம் பார்த்து இருக்கிறார்கள். இதில், முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த சிராஜ் மீது கால் நீட்டியதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கொலையாளிகளின் வாக்குமூலம்:

அதனால், இம்ரான் மற்றும் முகமது கலீமின் தாயாரை, சிராஜ் அவதூராக பேசியுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்டு, சிராஜை மது அருந்த அழைத்து திட்டமிட்டு கொலை செய்ததாக இம்ரான் மற்றும் முகமத் கலீம் கூறியுள்ளார்கள். தற்போது இவர்களை கைது செய்திருக்கும் போலீசார், மேலும் தலை மறைவாகி இருக்கும் நால்வரை தேடி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தான் ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் குறித்து:

நடிகர் தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்படப் பாடல் ஆசிரியர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாகவே இவர் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதை அடுத்து தனுஷ் ‘குபேரா’ படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரஷ்ஷிகா மந்தனா நடிக்க உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement