தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ஜெ. ஜெயலலிதா. இவர் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்து தமிழக முதல்வர் ஆனார். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியலிலும் சிங்கப்பெண் போலவே பெரும் ஆளுமை செய்தார். ஜெயலலிதா அவர்களின் ஆட்சி முறையை பற்றி பேசாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு இந்தியாவில் மூன்றாம் கட்சியாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகின்றனர். ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை படமாக்க பல பேர் முயற்சி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் “தலைவி” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெ. ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை விப்ரி மீடியா தயாரித்து வருகிறது. இந்த படத்தை பொறுத்தவரை ஜெயலலிதாவின் திரை வாழ்க்கையில் ஆரம்பித்து அரசியலில் அவர் நுழைவது வரைக்குமான காட்சிகள் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தி என்று இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
இதையும் பாருங்க : தொங்கி கொண்டே ஊசலாடுவோம். கோமாளி பட நடிகையின் சேஸ்டையை பாருங்க. வீடியோ.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பின் அரவிந்த் சாமியின் நடன வீடியோவும் வெளியாகியிருந்தது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பல எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். இந்நிலையில் தலைவி படத்தின் உண்மையான கதை எழுத்தாளர் அஜயன் பாலா பாஸ்கரன். இவர் தலைவி படத்தில் தனக்கு நடந்த துரோகத்தை குறித்து சோசியல் மீடியாவில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, சினிமாவில் எவ்வளவோ நம்பிக்கை துரோகத்தை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால், தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இத்தனைக்கும் நான் ஆறு மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் கூட தலைவி படத்தில் என் பெயரை சுத்தமாக நீக்கி விட்டார்கள். அதோடு திரைக்கதையில் வணிக நோக்கத்தில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை வைத்தென். அதை கூட அவர்கள் காதில் வாங்கவில்லை. இது எல்லாம் தான் நான் அவமானப்படுத்தப்பட்டதற்குக் காரணம். 10 ஆண்டுக்கும் மேலாக நானும் இயக்குனர் விஜய்யும் நட்பாக பழகி வந்தோம்.
நட்பின் மூலம் இயக்குனர் விஜய்யால் நான் பல இழப்புகளையும், துரோகங்களையும் அனுபவித்துக் கொண்டேன். ஆனால், இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நட்பின் பெயரில் ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகில் குத்தியது தான். சில தினங்களுக்கு முன்பு நான் பேசினேன். அப்போது கூட இது பற்றி வாய் திறக்கவில்லை என்னுடைய நண்பர் விஜய். நட்பிற்காக கூட சினிமாவில் முறையான ஒப்பந்தம் இல்லாமல் யாரும் பணிபுரிய வேண்டாம். எழுத்தாளர்களிடம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை என்று கூறினார்.
மேலும், இந்த பதிவை பின்னர் நீக்கிய அஜயன், நேற்று இரவு நண்பரும் இயக்குனருமான விஜய் இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குனரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார். சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தை காண்பித்தார். இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணு வுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை மூலம் சம்பளப்ரச்னைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக.இதழியல் முகநூல் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.