துப்பாக்கி 2 அல்லது கத்தி 2..!முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..!அவரே சொன்ன தகவல்..!

0
313

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் இயக்கிய சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க ஏ ஆர் முருகதாஸ் திட்டம் தீட்டி வருகிறார்.

நடிகர் விஜயை வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களை இயக்கிவிட்டார் முருகதாஸ். இந்த மூன்று படங்களுமே மாபெரும் ஹிட் அடைந்தது.அதிலும் துப்பாக்கி திரைப்படம் விஜயின் திரை வாழக்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருந்த்து.

முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கிய கத்தி படமும் சரி துப்பாக்கி படமும் சரி, இரண்டாவது பாகம் இருக்கும் என்ற எதிர்பார்புடனேயே முடித்திருந்தார் முருகதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸிடம் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகிய இரு படங்களில் எந்த படத்தை இரண்டாம் பாகம் எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்ப்பட்டது.

அதற்கு பதிலளித்த இயக்குனர் இந்த இரண்டு படத்திலும் இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சி இருப்பது போல தான் முடித்திருந்தேன். ஆனால், இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் என்பதால் அந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முதல் பாகத்தை விட ஒரு நல்ல கரு கிடைக்க வேண்டும். அதனால் துப்பாக்கி மட்டும் பண்ணலாம் என்ற ஒரு யோசனையில் உள்ளதாக கூறியுள்ளார்.