வாணிக்கு அடித்த ஜாக்பாட். ஏ ஆர் முருகதாஸ் ப்ராஜக்ட்டில் கிடைத்த வாய்ப்பு.

0
1960
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் வந்தவர்கள் தான். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கிறார் நம்ம வாணி போஜன். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார். பின் நடிகை வாணி போஜன் அவர்கள் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். ரசிகர்கள் சத்யா என்பதை விட இவரை தாசில்தார் என்று தான் அதிகம் அழைப்பார்கள். மேலும், வாணி போஜன் அவர்கள் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்தார்.

- Advertisement -

பின் தமிழில் அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள படம் தான் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் வாணி போஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேச வைத்தது. இந்த படம் காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவை. இந்த படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்து உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் ஆக கலக்கி கொண்டிருக்கும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் இணையதொடரில் கதாநாயகியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர்கள் தான் இந்த தொடரை இயக்க உள்ளார். இதற்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர் எங்கேயும் எப்போதும், ரங்கூன் ஆகிய படங்களையும் இயக்கி இருந்தார்கள். அந்த படங்களையும் ஏ.ஆர். முருகதாஸ் தான் தயாரித்துள்ளார். அந்த வகையில் தற்போது ஹாஸ்ட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள இந்த இணைய தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.

இந்த தொடரின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ஆனால், நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

Advertisement