தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Advertisement

வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.

மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.கஜா புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான டெல்டா பகுதி மக்களுக்கு, திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து பொருளுதவி, நிதியுதவி அளித்துவருவது பாராட்டுக்கு உரியது. ரஜினி, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி எனப் பலரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அம்மக்களுக்கு உதவுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “ டோரோன்டோவில் வரும் டிசம்பர் 24-ம் தேதி நடக்க உள்ள என்னுடைய இசை நிகழ்ச்சிக்கு கிடைக்கிற குறிப்பிட்ட தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணமாகக் கொடுக்கிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

Advertisement
Advertisement