இன்று மாலை 6:30 மணிக்கு சர்கார் இசை வெளியிட்டு விழாவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து.!

0
264
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று (அக்டோபர் 2 ) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Sarkar

அதே போல கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “சிம்டாங்காரன் ” என்ற பாடல் மட்டும் வெளியாகியிருந்தது. மேலும்,கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “ஒரு விரல் புரட்சி ” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. மேலும், இந்த விழாவில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தமிழின் பாரம்பரிய இசையையும் அதன் வரலாற்று பின்னணியையும் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார்.

Ar rahaman

அதே போல இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இறக்கிறாராம். நடிகர் சூப்பர் ஸ்டார் தற்போது “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பதால் நடிகர் ரஜினி இந்து நடக்கும் விழாவிற்கு வருகைதரு இருப்பதாக கூறப்படுகிறது.