மது எங்களை மன்னித்துவிடு ! நீயும் என் தம்பிதான் ! பிரபல முன்னணி நடிகர் உருக்கம்

0
8215
Actor madhu
- Advertisement -

சில தினங்களுக்கு முன்னர் கேரளா பாலக்காடு பகுதியில் அரிசி திருடியதற்காக மது என்ற 27 வயது மதிக்கத்தக்க ஆதிவாசி பகுதியை சேர்ந்த இளைஞரை சமூக மிருகங்கள் சிலர் அடித்து கொன்று சம்பவம் பலரையும் வருத்ததிற்கு உள்ளாகியது.இதனை அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நபர் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்டார் அந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.

mammootty

இந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்களும், கேரள முதல்வறும் கூட இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தனர் .இதனை அடுத்து மலையாள நடிகர் மும்முடி இந்த சம்பவத்திர்கான தனது வருத்தத்தையும்,கண்டனத்தியும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி மம்முட்டி கூறுகையில்’“தயவுசெய்து மதுவை ஆதிவாசி என அழைக்காதீர்கள். அவனை என் இளைய சகோதரன் என்று சொல்வேன். அவனை கும்பலாக கொன்றுவிட்டீர்கள்.. அவனும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு உரிமையுள்ள மனிதன் தான் என்றும்,பசிக்காக திருடுபவனை நீங்கள் எப்படி திருடன் என்று அழைக்க முடியும்,அப்படி பட்ட நிலைக்கு மதுவை உருவாக்கியது இந்த சமூகதின் அவலம்.பசிக்காக திருடியவனை கொன்று, சட்டத்தை கையில் எடுத்துக்கொளும் சமூகம் எப்படி சக மனிதனுக்கு நியாயம் செய்யும்.. எங்களை மன்னித்துவிடு மது” என மம்முட்டி வருத்தத்துடன் கூறியுள்ளார்

Advertisement