1 கிலோ கோதுமை மாவு தானே என்று வாங்காமல் சென்ற சிலர். அதையும் வாங்கி சென்ற ஏழை மக்களுக்கு அமீர் கான் வைத்திருந்த சர்ப்ரைஸ்

0
2839
ameer
- Advertisement -

கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் பல விதமான உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால், பாலிவுட் நடிகர் செய்துள்ள உதவி பலரையும் ஈர்த்துள்ளது. ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அமீர் கான். இவர் நடித்த ‘தூம் 3, டங்கல்’ மற்றும் ‘தகஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ ஆகிய மூன்று ஹிந்தி படங்களும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று படங்களில் குறிப்பாக ‘டங்கல்’ திரைப்படத்தில் அமீர் கானின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

-விளம்பரம்-

அப்படம் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், மற்றும் டப் செய்யப்பட்ட மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. ‘இந்த படத்தினை பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருந்தார். இப்போது ‘லால் சிங் சத்தா’ என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் அமீர் கான்.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிலையில், இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தலா ஒரு கிலோ கோதுமை மாவு கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் நடிகர் அமீர் கான்.

-விளம்பரம்-

இதனை தெரிந்து கொண்ட மக்கள் பலரும், ஒரு கிலோ கோதுமை மாவு தானே என்று நினைத்து அவரிடம் இருந்து அதனை வாங்க செல்லவே இல்லையாம். ஆனால், ரொம்பவும் கஷ்டப்படும் ஏழை மக்கள் அமீர் கான் கொடுத்த ஒரு கிலோ கோதுமை மாவை வாங்கியிருக்கிறார்கள். அப்படி வாங்கி சென்ற ஏழை மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.

அது என்ன சர்ப்ரைஸ் தெரியுமா? அந்த ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டினுள் ரூ.15 ஆயிரம் பணம் இருந்திருக்கிறது. இதனை பார்த்த ஏழை மக்கள் மிகவும் சந்தோஷப்பட்டு நடிகர் அமீர் கானை மனதார பாராட்டி கொண்டிருக்கிறார்கள். கோதுமை மாவு பாக்கெட்டிற்குள் ரூ.15 ஆயிரம் வைக்கப்பட்ட தகவலை, அப்பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்த அவரின் உதவியாளர்களுக்கு கூட சொல்லவில்லையாம் அமீர் கான்.

Advertisement