ஆராத்யா பச்சன் நீதிமன்றத்தை நாடி இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவின் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதற்கிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். ஆராத்யாவுக்கு தற்போது 13 வயது ஆகிறது. பாலிவுட் முக்கிய நட்சத்திர குடும்பத்தின் வாரிசான ஆராத்யா பச்சன் மீது மீடியா வெளிச்சம் என்பது அவர் பிறந்தது முதல் இருந்து வருகிறது.
ஆராத்யா தொடர்ந்துள்ள வழக்கு:
இந்நிலையில், ஆன்லைன் ஊடகங்களில் தன்னை பற்றியும், தனது உடல்நிலை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதனை நீக்க கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆராத்யா பச்சன் தற்போது வழக்கு தொடர்ந்து உள்ளாராம். இந்த மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், மனுவுக்கு பதில் அளிக்க, கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாம். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற மார்ச் 17ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார்.
ஏற்கனவே வீடியோக்கள் நீக்கம்:
கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி சி.ஹரி.சங்கர், இது போன்ற வீடியோக்கள் பரப்புவதை கடுமையாக் கண்டித்தார். ஒவ்வொரு குழந்தையும் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். ஒரு மனிதனின் உடல் நலம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது சட்டத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ‘ஆராத்யா பச்சன் உடல்நிலை மோசமாக உள்ளது’ போன்ற போலி வீடியோக்களை நீக்கியது.
ஐஸ்வர்யா -ஆராத்யா பாண்டிங் :
மேலும், ஆராதியாவின் உடல்நிலை தொடர்பான வக்கிரமான பொய் பரப்பும் தகவல்களை நீக்கச்சொல்லி வெளியிட்ட youtube சேனல்களுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த SIIMA 2024 விருது விழாநிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை அழைத்து சென்றிருந்தார்.
ஐஸ்வர்யா ராய் மகள் செய்தது:
அந்த விழாவில் ஐஸ்வர்யாராயிடம் பேச நடிகர் சிவராஜ்குமார் வந்தார். அப்போது ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவை அவருக்கு அறிமுகம் செய்து வைக்க, ஆராத்யா சிவராஜ் காலில் விழுந்து இருந்தார். உடனே அவரும் ஆசீர்வாதம் செய்திருந்தார். அந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதைப் பார்த்த பலருமே, எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கலாச்சாரத்தை மறக்காமல் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை வளர்த்திருக்கிறார் என்று ஆராத்யா பச்சன் செய்த செயலைப் பாராட்டி இருந்தார்கள்.