ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் இதில் இருந்து சுட்டதா – ஆதாரத்தை பதிவிடும் நெட்டிசன்கள்.

0
6910
Aayirathil Oruvan

செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அதன் போஸ்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வித்யாசமான மற்றும் தரமான படங்களை கொடுப்பதில் இயக்குனர் செல்வராகவனுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. காதல் கொண்டேன் படம் துவங்கி NGK வரை இவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அப்போதே பிராம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் ஒரு கனவு படம் என்ரே கூறலாம்.

மேலும், அவருக்கு தேசிய விருது கூட ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவரவிட்டார் என்ரெல்லாம் கூட செய்திகள் வந்தது. இந்த படத்தில் நடிகர் பார்திபனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ் என்று கூட கூறப்பட்டது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்தனர். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

சமீபத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரீ – ரிலீஸ் ஆகி இருந்தது.10 ஆண்டுகள் கழிந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதில்., இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கான போஸ்டர் ஒன்றையும் நேற்று வெளியிட்டு இருந்தார் செல்வராகவன். ஆனால், இந்த போஸ்டர் 2011 Mathieu Lauffray என்பவர் எழுதி வெளியிட்ட art book of mathieu lauffray என்ற புத்தகத்தின் கவர் போட்டோவை போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement