கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்குவது சின்னத்திரை சீரியல்கள். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வெள்ளித்திரை நடிகர்கள் காட்டிலும் சின்னத்திரை நடிகர்களை தான் ஃபாலோ செய்வதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் அவர்களை டிவியில் தினமும் பார்ப்பது தான்.
அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ஷாயம் ஜி. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சில வருடங்களாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ஷ்யாம். இந்த செம்பருத்தி சீரியல் ஏற்கனவே தெலுங்கில் ‘முத்த மந்தாரம்’ என்ற தலைப்பில் உருவானதாகும். மேலும், இந்த சீரியலை தான் தமிழில் செம்பருத்தி என்று ஒளிப்பரப்பு செய்கிறார்கள். செம்பருத்தி சீரியலில் ஆதியின் நண்பராக நடித்திருந்தவர் ஷ்யாம்.
செம்பருத்தி சீரியலில் நடித்த ஷ்யாம்:
நடிகர் ஷ்யாமின் உண்மையான பெயர் சைப் அலிகான். செம்பருத்தி சீரியலில் ஆதியின் நண்பராக நடித்து வந்திருந்த ஷாம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வந்தார். இவர் சீரியலில் ஏதாவது நகைச்சுவை, கலாட்டா என எதையாவது பண்ணிக் கொண்டு தான் இருப்பார். சீரியலையும் கலகலப்பாகவே வைத்துக் கொண்டு இருப்பார். ஆனால், சில காரணத்தினால் அவர் திடீரென்று சீரியலை விட்டு விலகினார். இவர் சீரியல் விட்டு விலகியதற்கு காரணம் இன்று வரை தெரியாமல் இருக்கிறது.
அபியும் நானும் சீரியலில் ஷ்யாம்:
இந்த சீரியலின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு சன் சன் டிவியில் எட்டு வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியலில் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அபியும் நானும் தற்போது இல்லத்தரசிகளை மட்டுமல்லாது குட்டிகஸ்ளையும் கவர்ந்து இருக்கிறது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அபி மற்றும் நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்து வருகிறார்கள்.
வைரலாகும் ஷ்யாம் குழந்தை புகைப்படம்:
இந்த சீரியலின் மூலம் ஷ்யாம் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்திருக்கிறது. சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பாராட்டி வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையுமே பகிர்ந்து வருவார். இந்த நிலையில் ஷ்யாம் அவர்கள் ஒரு சந்தோஷமான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அது என்னவென்றால், தற்போது ஷ்யாம் இரண்டாவது முறை அப்பாவாகி இருக்கிறார்.
ஷ்யாம்க்கு இரண்டாவது பெண் குழந்தை:
அதாவது ஷ்யாம்க்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த அழகான, மகிழ்ச்சியான தருணத்தை ஷ்யாம் அழகான புகைப்படங்கள் மூலம் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஷ்யாம் தன்னுடைய பிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி அவரின் அருகில் மூத்த மகள் இருக்கிறார். பின் “blessed with girl baby again” என்ற கேப்டசனையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சின்னத்திரை நடிகர், நடிகைகள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.