உடல் எடை கூடியதால் எல்லாரும் பாடி ஷேமிங் பண்ணாங்க – நடிகை அபிராமியின் கலங்க வைக்கும் பேட்டி

0
133
- Advertisement -

பிரபல நடிகை அபிராமி எடை கூடிய போது, அவர் எதிர்கொண்ட மன வேதனைகள் குறித்து அளித்த பேட்டி ஒன்று இப்போது வைரல் ஆகியுள்ளது. 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. அவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமார். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்

-விளம்பரம்-

இதை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல வாய்ப்புகள் வந்தது. மேலும், நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்திலும் நடிகை அபிராமி நடித்துள்ளார். அதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பல பேட்டிகள் நடிகை அபிராமி தந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அபிராமி பேட்டி:

அந்த பேட்டியில் அபிராமி, மீடியாவில் இருந்து மட்டுமல்ல வெளியில் இருந்தும் எனக்கு பாடி ஷேமிங் நடந்திருக்கிறது. நான் உயரமாக இருப்பதாலும், சமீபத்தில் இடை கூடியதற்காகவும் பாடி ஷேமங்கிற்கு ஆளாகினேன். நமக்கு என்ன பிரச்சனை என்று பிறர் நினைக்க மாட்டார்கள். நமக்கு ஏதாவது மருத்துவ ரீதியான பிரச்சனையா? இல்லை மன அழுத்தத்தில் இருக்கிறோமா? என்பது பற்றி எல்லாம் பாடி ஷேவிங் பண்றவங்களுக்கு கவலை கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

எடை கூடியதற்கு காரணம்:

தொடர்ந்து பேசியவர், இந்த மாதிரி விஷயங்கள் எல்லாருக்கும் நடக்கக் கூடியது தான். அந்த நேரத்தில் உடல் ரீதியான பல்வேறு காரணங்களால் எனக்கு எடை கூடியது. அப்போது என்னுடைய போட்டோவை பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்கும். இப்போதெல்லாம் நான் உடல் ரீதியாகவும், எமோஷனல் ஆகவும் ஹெல்தியா இருக்கேனா இல்லையா என்பதில் மட்டும் தான் நான் குறிக்கோளாக இருந்தேன். இப்போதெல்லாம் என் எடை கூடுவதை நினைத்து நான் கவலைப்படுவதில்லை.

-விளம்பரம்-

ஹிப்னோ தெரபி :

ஏனென்றால், எனக்கு இரண்டுமே முக்கியமாக தெரிந்தது. அந்த நேரங்களில் எனக்கு மனப்பதற்றம் நிறைய இருந்தது. தற்போது எனக்கு ‘ஹிப்னோ தெரபி’ தான் மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் மருத்துவர்கள் கொண்டு தான் கையாண்டேன். சில நேரங்களில் செத்து விடுவோமோ என்றெல்லாம் நினைத்தது உண்டு. ஆகையால் மனநல பிரச்சனைகளுக்காக மருத்துவ உதவி எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம் என்று நடிகை அபிராமி கூறியிருந்தார்.

அபிராமி திரைப்பயணம்:

நடிகை அபிராமி வானவில் படத்திற்குப் பிறகு, தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார் மேகம், சமஸ்தானம், விருமாண்டி, 36 வயதினிலே போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக கமலுடன் நடித்த ‘விருமாண்டி’ படம் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார் என்றும் சொல்லலாம். மேலும், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டங் லைப்’ படத்திலும் நடிகர் அபிராமி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement