பிடிவாத குணம்.! அழகுக்கு முக்கியத்துவம்.! கள்ளகாதலன் முதல் திருமணம்.! அபிராமி உறவினர்கள்

0
1927
Abirami

குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி குறித்து அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவிக்கின்றனர் அவரின் உறவினர்கள். சென்னை, குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்தில் தீவிர ஆய்வை நடத்தியுள்ளனர் போலீஸார். அவரது வீட்டின் அருகில் உள்ள கடையில் அடிக்கடி சென்று பேசும் தகவல் கிடைத்து, அந்தக் கடைக்காரரிடம் விசாரித்துள்ளனர். அவரோ, `என் கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக வருவார்’ என்று மட்டும் கூறியிருக்கிறார். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

sundharama and abirami

இதன் பின்னர் நடந்த விவரங்களை நம்மிடம் விவரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், “அபிராமி, சுந்தரம் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்தோம். அதில் சில தகவல்கள் இருந்தன. அதைக் காட்டிய பிறகே இருவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சுந்தரத்தின் மனைவி முத்துலட்சுமி, அபிராமியின் கணவர் விஜய் மற்றும் அபிராமியின் தந்தை சௌந்தரராஜன், வீட்டு உரிமையாளர் சுமதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தோம்.

அப்போது அபிராமி-சுந்தரம் ஆகியோர் நட்பு குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்தன. குழந்தைகள் கொலை நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் அபிராமி. அவர் சுந்தரம் வீட்டில்தான் தங்கியுள்ளார். அந்தத் தகவல் தெரிந்ததும் அபிராமியின் அப்பா சௌந்தரராஜன், சுந்தரம் வீட்டுக்குச் சென்று அபிராமியை அழைத்து வந்து விஜய்யிடம் ஒப்படைத்துள்ளார். அதேநேரம், அபிராமி, சுந்தரத்தின் நட்பு அவர்களின் உறவினர்களுக்கும் சுந்தரத்தின் மனைவிக்கும் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் அந்தத் தகவலை எங்களுக்குச் சொல்லவில்லை. புகார் மட்டும் கொடுத்திருந்தால் இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றியிருப்போம்” என்றவர்,

abirami 1

“அபிராமியின் அப்பா சௌந்தரராஜனிடம் விசாரித்தபோது, அவளுக்குப் பிடிவாதம் குணம் உள்ளது. அந்தக் குணம்தான் அவரை இப்படியொரு செயலைச் செய்ய வைத்துவிட்டது எனக் கண்ணீருடன் பேசினார். வீட்டு உரிமையாளர் சுமதியோ, `கார்னிகாவுக்கு 4 வயதானாலும் அவரைப் பள்ளியில் சேர்க்கவில்லை. அஜய்யை பள்ளிக்கு அழைத்துச் செல்லதான் ஸ்கூட்டி வாங்கி கொடுத்தார்கள். எப்போதும் எங்களிடம் அழகு குறித்து அதிகம் பேசுவாள் என்று தெரிவித்துள்ளார். அபிராமிக்கும் சுந்தரத்துக்கும் கடந்த இரண்டு மாதங்களாகத்தான் பழக்கம் இருந்துள்ளது. இதில், அபிராமியின் இந்தத் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று அவரிடமே போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘சுந்தரத்தை முழுமையாக நம்பினேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சுந்தரத்தின் மனைவி முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, ‘என்னுடைய சொந்த ஊர் சேலம். சுந்தரமும் நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இதை எங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஏற்கவில்லை. வீட்டில் உள்ளவர்களை எதிர்த்துதான் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. அவருக்கு நான் குழந்தை, எனக்கு அவர் குழந்தை என்றுதான் சந்தோஷமாக வாழ்ந்துவந்தோம். என் வீட்டுக்கு அபிராமி வந்திருக்கிறார். என்னிடம்கூட அன்பாகப் பேசியிருக்கிறார். ஆனால், சுந்தரம் இப்படியொரு துரோகம் செய்வார் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை’ என்று கதறியுள்ளார்.

Abirami

abi

abihrami

இதையடுத்து, குழந்தைகளைக் கொலை செய்ய தூக்க மாத்திரைகள் எப்படி கிடைத்தது என அபிராமியிடம் விசாரித்தோம். அதற்கு அவர், ‘நான் பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை. மாதவிடாய் காலகட்டத்தில் பயன்படுத்தும் மாத்திரைகள் அவை. என்னிடம் 5 மாத்திரைகள் இருந்தன. அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்துதான் பாலில் அதைக் கலந்து கொடுத்தேன். ஆனால், அவசரத்தில் மாத்திரைகள் சரியாகக் கரையவில்லை. கடைசியாகக் கார்னிகா பால் குடித்ததால் இறந்துவிட்டார் எனத் தெரிவித்தார்’ ” என்றார்.