சமீபத்தில் மருமகன், இப்போ மாமனார் – அல்லு அர்ஜுன் பாடலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவியின் பாடல்.

0
421
regina
- Advertisement -

தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தார். பின் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன்இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருக்கிறார். இந்நிலையில் இதற்கு தற்போது சோசியல் மீடியாவில் எதிர்ப்பு கிளப்பி இருக்கிறது. இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக திருவும், இசையமைப்பாளராக மணிசர்மாவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

- Advertisement -

ரெஜினாவின் ஐட்டம் பாடல் :

மேலும், இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியிருக்கும் பாடல் வரிகளுக்கு தற்போது சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆச்சாரியா படத்தில் ரெஜினா அவர்கள் சானா கஷ்டம் என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இது ஆண்கள் தான், ஆனால் மருத்துவர்கள் இன்றைய இளைஞர்கள் ஆர்எம்பி டாக்டர்களாக விரும்புவதாகவும், காரணம் அவர்கள் அழகு சிகிச்சை என்ற பெயரில் நடிகைகளை தொட்டு சிகிச்சை அளிக்க முடியும் என்ற விதத்தில் அந்த பாடல் வரிகள் எழுதப் பட்டிருந்தது.

பாடலால் எழுந்த சர்ச்சை :

இதற்கு சோசியல் மீடியா முழுவதும் பல பேர் கண்டனம் தெரிவித்தும், பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள். மேலும், இந்த பாடலில் ரெஜினா உடன் சிரஞ்சீவியும் நடனம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் இவரது மருமகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஸ்பா படத்தில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஏற்கனவே சமந்தா பாடல் ஏற்படுத்திய சர்ச்சை :

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் சமந்தா அவர்கள் ‘ஊ சொல்லிறியா’ என்ற பாடலுக்கு பயங்கரமாக நடனம் ஆடி இருந்தார்.

ஊ சொல்லிறியா மாமா வரவேற்பும் எதிர்ப்பும் :

மிக பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது. இந்த பாடல் எவ்வளவு பிரபலம் ஆனதோ அந்த அளவிற்கு சர்ச்சை ஆனது. அதேபோல் சமந்தாவின் பாடலை தொடர்ந்து தற்போது ரெஜினா பாடலுக்கும் சோசியல் மீடியாவில் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். சமந்தா பாடல் அளவுக்கு ரெஜினாவின் பாடல் பிரபலம் ஆகவில்லை என்றாலும் இந்த சர்ச்சையின் மூலம் இந்த பாடலை பிரபலமாகி விடுவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Advertisement