சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அகில இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப்பின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 50 லட்சம் கோடி லஞ்சமாக பெற்றதாக சுகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 2019ஆம் ஆண்டு அவரை திகார் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சுகேஷ் சட்டவிரோதமாக பல வழிகளில் பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாக தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சுகேஷ் மீது வலுவான பல வழக்குகள் விழுந்து இருக்கிறது. மேலும், இவர் அனைத்து அரசியல் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அதோடு சுகேஷ் சந்திரசேகரன் உடன் சேர்ந்து பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக அவருடைய காதலி ஜாக்கி பெர்னான்டஸ் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டும் இல்லாமல் சுகேஷ் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

Advertisement

அதனடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலி மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவருடைய காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சார்பில் 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் சுகேஷ் தனது காதலி ஜாக்குலினுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும். இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டது அடுத்து ஜாக்லின் நாட்டை விட்டு வெளியேற நினைத்தார்.

இதனை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்காக இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின் சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்தார்கள். மேலும், அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement
Advertisement