கூலி படத்திற்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் குறித்து ரஜினி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், ஆனால், இடையில் தர்பார், அண்ணாத்தே என்று தொடர் பிளாப் படங்களை கொடுத்து கடந்த சில வருடங்களாக ஹிட் படத்தை கொடுக்க ரஜினி போராடிவந்தார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Advertisement

அதோடு சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினி தன்னுடைய கைகளில் தங்க கடிகாரம் கை விலங்கு அணிந்திருந்தார். அதோடு இந்த படத்தில் இவர் தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் வீடியோவில் ரஜினி பேசிய பழைய வசனம் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு இந்த டீசரில் இடம்பெற்ற இசையால் புதிய சர்ச்சையை படக்குழு சந்தித்து உள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த இசையை தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்திற்கு அனிருத் பயன்படுத்துகிறார்.

Advertisement

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் :

இப்படி இருக்கும் நிலையில் அனிருத் ரஜினியின் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கு இளையராஜா அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதோடு இதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும், இல்லை என்றால் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினி விளக்கம் :

இந்நிலையில், ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் இளையராஜா நோட்டீஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ‘அது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை’ என்று கூறிவிட்டு இந்த பஞ்சாயத்தில் இருந்து நைஸாக எஸ்கேப் ஆகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.

Advertisement