அஜித்,சூர்யா நடிக்க மறுத்த படத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆன ஹீரோ. என்ன படம் தெரியுமா ?

0
94154
ajith-surya
- Advertisement -

2001 ஆம் ஆண்டு தமிழில் வந்த படம் தான் “ஆனந்தம்”. இந்த படத்தை லிங்குசாமி அவர்கள் இயக்கினார். ஆர்பி சவுத்ரி அவர்கள் தான் இந்த படத்தை தயாரித்து உள்ளார். மேலும், இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா உட்பட நட்ச்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதை ஆகும். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோக்களாக திகழ்பவர்கள் அஜித் மற்றும் சூர்யா. இவர்கள் இருவருக்குமே இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர்கள் உடைய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

ஆனால், இவர்கள் இருவரும் நடிக்க மறுத்த கதையில் இளம் ஹீரோ ஒருவர் நடித்து அந்தப் படம் மிகப் பெரிய அளவு வெற்றி அடைந்தது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனந்தம் படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. தற்போது கூட ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக ஆனந்தம் படம் திகழ்ந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் சாக்லேட் பாய் அப்பாஸ் கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் தல அஜித் இடம் தான் பேசப்பட்டது. அன்றைய கால கட்டங்களில் அஜித் தான் காதல் மன்னனாக வலம் வந்தார். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அஜித் மறுத்து விட்டார். பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யாவிடம் சென்றார்கள். அவரும் மூன்றாவது ஹீரோ போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு ஈடுபாடு எதுவும் இல்லை என்று கூறி மறுத்து விட்டார்.

இதையும் பாருங்க : நீ என்ன தேசிய விருது வாங்க போறியா ?என்று கலாய்ச்சாங்க. மேடையில் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி.

- Advertisement -

அதற்கு பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்தார். இந்த படத்தின் மூலம் அப்பாஸ் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். படம் வெளியான பிறகு அப்பாஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் ஆனந்தம் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா அவர்கள் நடித்திருப்பார். உண்மையிலேயே தமிழ் சினிமாவுக்கு நடிகை சினேகா அறிமுகம் ஆனது இந்த ஆனந்தம் படத்தில் தான். இந்த தகவல் பலருக்கும் தெரியாத விஷயம் ஆகும்.

நடிகர் அப்பாஸ் அவர்கள் 1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ் அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது அய்மான் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement