நீ என்ன தேசிய விருது வாங்க போறியா ?என்று கலாய்ச்சாங்க. மேடையில் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி.

0
26103
keerthi-suresh
- Advertisement -

தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப் படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக சினிமா உலகில் மறைந்த பிரபலமான நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கினார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. வைஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியானது. இந்த படத்தில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவத்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது. சமீபத்தில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கி உள்ளார். சமீபத்தில் நடந்த “வொண்டர் வுமன் அவார்டு” என்ற விழாவில் ‘பிரேசியஸ் ஜூவல் ஆஃப் சௌத் சினிமா’ என்ற விருதினை நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு இயக்குனர் அட்லி வழங்கினார். இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் கூறியது, இந்த விருதினை என்னுடைய நண்பன் கையால் வாங்கியது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இங்க உள்ள எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

எல்லா பெண்கள் மத்தியில் எனக்கு இந்த அங்கீகாரம் கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நிறைய பேர் சொன்னார்கள் இந்த படத்தின் மூலம் நீ என்ன தேசிய விருது வாங்க போறியா? என்று அதற்கான பதிலை நான் இப்போது நிரூபித்து விட்டேன் என்று கூறினார். அப்போது அட்லி அவர்கள் கூறியது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கீர்த்தி எங்களுக்கு சின்ன சின்ன மானிட்டர் வீடியோக்களைக் காண்பித்தார். அதை பார்த்து நிஜமாகவே இவர் இப்படியெல்லாம் நடிப்பாரா என்று அசந்து விட்டேன்.

-விளம்பரம்-

இந்த படத்தை நாங்கள் ஹைதராபாத்தில் பார்த்தோம். இந்த படத்தை பார்க்கும் போதே கீர்த்தியிடம் நான் சொன்னேன் நீ கண்டிப்பாக தேசிய விருது வாங்குவ என்று அதை நிரூபித்தும் விட்டார். மகாநதி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 168” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் “பென்குயின்” என்ற படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதோடு கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாலிவூட் பக்கம் கால் பாதிக்க போகிறார் என்று தெரிய வந்து உள்ளது.

Advertisement