தன்னுடைய பெயர் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் அஜித் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.
இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் வைரலாகி வருகிறது.
அஜித் பெயர் கோஷம்:
இந்த கோஷத்தால் வருத்தமடைந்து நடிகர் அஜித் அறிக்கை ஒன்று வெளியிடுகிறார். இதை நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அஜித் வெளியீட்டு அறிக்கையில், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளிகளில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‛க….. அஜித்தே” என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024
அஜித் அறிக்கை:
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்! வாழு & வாழ விடு! அன்புடன் அஜித் குமார் என்று கூறி இருக்கிறார்.
அஜித் திரைப்பயணம்:
கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது.
அஜித் படங்கள்:
தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதை அடுத்தும் சில படங்களில் நடிப்பதற்காக அஜித் இடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.