கவலைக்கிடத்தில் நடிகரின் உடல்நிலை. உதவி கேட்கும் நடிகர்சங்கம்

0
1385
Actor alwa Vaasu

அல்வா வாசு – இவரை நாம் பல வடிவேலு காமெடிகளில் பார்த்திருப்போம். எல்லோரையும் சிரிக்கவைத்த இவரின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் இவரது குடும்பத்திற்கு நல்ல உள்ளங்கள் உதவும்படி நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Actor alwa Vaasu

- Advertisement -

500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பகாலத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இயக்குனராக வாய்ப்பு கிடைக்காததால் நடிப்பில் இறங்கினார்.

பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. கடந்த ஆறுமாதங்களாக இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் பெரிதாக இல்லை. அதோடு உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Actor alwa Vaasu

சென்னையில் இருக்கமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதால் இவர் தற்போது தன் சொந்த ஊரான மதுரைக்கே சென்றுவிட்டார். தற்சயம் அவரது மனைவிதான் அவரை மிகவும் சிரமப்பட்டு கவனித்துக்கொண்டுள்ளார். கடந்த மூன்று மாதமாக அவரது உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்த நிலையில் தற்போது அவரது உடல் எந்த மருந்தையும் ஏற்கவில்லை. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இந்த நிலையில் கடவுளிடம் பிராத்திப்பதை விட வேறு வழி இல்லை.

இந்த ஒரு சூழலில் அவரின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவி கிடைத்தால் அவரது மனதிற்கு அது நிம்மதி அளிக்கும். ஒரு வேளை அந்த நம்பிக்கையே கூட அவரை காப்பாற்றி விடும். ஆகையால் தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் திரு பொன்வண்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement