கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல வில்லன் நடிகர் ஆனந்த் ராஜின் சகோதரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் சினிமா உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பியவர் நடிகர் ஆனந்தராஜ். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்

Advertisement

இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜ் அவரின் சகோதரர் கனகசபைக்கு நேற்று பாண்டிச்சேரியில் காலை பதினோரு மணியளவில் தற்கொலை செய்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், கனகசபையின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கனகசபைக்கு ஆனந்த்ராஜை தவிர மற்றொரு இளைய சகோதரர் இருக்கிறார். அவர்களது பூர்வீக சொத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆனந்த்ராஜிடமும், மற்றொரு பங்கு இளைய சகோதரரிடம் இருந்துள்ளது.

இளைய சகோதரர், கனகசபையின் பங்கை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தனக்கு சொத்து கிடைக்காததால் விரத்தியில் இருந்துள்ளார் கனகசபை. இந்த நிலையில் இவர் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கனகசபை கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்தனர்.

Advertisement

Advertisement

ஆனால், தனது சகோதரரின் தற்கொலைக்கு காரணம் என்னவேன்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார். அதில், ல், என் தம்பி ஏலச்சீட்டு நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தார், அதுசம்பந்தமாக சிலர் அவரை மிரட்டி வந்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் அவர் இறந்து விட்டார். இந்த தகவலை அவர் ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். தனது தம்பியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று போலீசாரை கேட்டு கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement