தந்தையின் மரணத்திற்கு வரமுடியாத சூழலில் சிக்கியுள்ளார்களா விசுவின் மகள்கள்?

0
152221
Visu
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனரான விசு நேற்று உடல் நல குறைவால் காலமானது தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர். நடிகர் விசு அவர்கள் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன் ஆகும். இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதற்குப் பிறகு விசு நடித்த முதல் படம் ரஜினியின் தில்லு முல்லு. அந்த படத்தில் இவரே டப்பிங் குரலும் செய்து உள்ளார். பின் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். பின்னர் நடிகர் விசு அவர்கள் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து நான் இருப்பேன் – தயாரிப்பாளரிடம் கூறியுள்ள அஜித். அதுவும் இந்த படத்திற்கு பின்.

அதனை தொடர்ந்து மணல் கயிறு, ரகசியம், புதிய சகாப்தம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவர் கடைசியாக தங்கமணி ரங்கமணி என்ற படத்தை இயக்கி உள்ளார். இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் உள்ளார். வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

-விளம்பரம்-

வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு, 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடந்த 10 நாட்களாகவே மோசமடைந்து இருந்ததால் நேற்று மாலை சிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகர் விசு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விசு கடந்த 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லாவண்யா, சங்கீதா , கல்பனா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள். தற்போது அமெரிக்காவில் கொரோனா அச்சம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விசுவின் மகள்கள் சிலர் இந்தியா வரமுடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்ட்டுள்ளதாக இந்த நிலையில் விசு நேற்று அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement