எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். உலகம் முழுவதும் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார் தல அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் தல. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார் என்றும், இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் P.L.தேனப்பன் அவர்கள் நடிகர் அஜித் குறித்து சுவாரசியமான சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, நான் அஜித் சாரோட தொடரும் என்ற ஒரு படத்தில் மட்டும் தான் ஒர்க் பண்ணினேன். அந்த படத்தில் தயாரிப்பாளர் கம்பெனிக்கு மேனேஜராக இருந்தேன்.
வீடியோவில் 5 : 54 நிமிடத்தில் பார்க்கவும்
அந்தப் படத்தின் போது எனக்கு அஜித்தை பற்றி ஒன்னும் தெரியாது. அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆனோம். தினமும் நான், அஜித், ஷாலினி மூவரும் ஷெட்டில் விளையாடுவோம். அப்போது அஜித் ஷூட்டிங் முடித்து வந்து இரவு நேரத்தில் எங்களுடன் வந்து சேர்ந்து விளையாடுவார். அப்போது அவர் வில்லன் படத்தில் நடித்திருந்தார்.
ஒரு நாள் அஜித் என்னிடம் வந்து கண்டிப்பாக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து நான் இருப்பேன் என கூறினார். அதே போல் தற்போது அவர் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்த படியாக உள்ளார். வில்லன் படம் வரும் போது தான் எனக்கு தெரிந்தது. அவர் கண்டிப்பா சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பார் என்று நினைத்தேன். அதற்கேற்ற மாதிரி அஜித் சாரும் வந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளர்களில் P.L.தேனப்பன் ஒருவர். இவர் 1998 ஆம் ஆண்டு கமலஹாசன் மற்றும் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான காதலா காதலா என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு வெளிவந்த பேரன்பு என்ற படத்திற்கு தயாரிப்பாளராக இருந்துள்ளார்.