என்னது இது ஜி.வி. பிரகாஷா ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே

0
523
gv prakash

2006 இல் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைபாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்.முதலில் இசையமைப்பாளராக இருந்த இவர் பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்களாக மாறிவிட்டனர்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்துவரும் இவர் தற்போது சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹமானின் உறவினரான ஜி. வி.பிரகாஷ் 1992 இல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் குச்சி குச்சி ராக்கமா என்ற பாடலை பாடியுள்ளார்.மேலும் ஜெண்டில் மேன் படத்தில் வந்த சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலையும் பாடியுள்ளார்.இந்நிலையில் மறைந்த பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீத் ஜி. வி. பிரகாஷை நேர்காணல் செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறு பையனாக இருக்கும் ஜி.வி அவர் பாடிய சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரளாகிவருகிறது.