நடிகர் கருணாஸிற்கும் கொரோனா தொற்று – இவருக்கும் வர காரணம் இவர் தானாம்.

0
1222
karunas
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.சமீபத்தில்கூட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

சினிமா பிரபலங்களை தாண்டி அரசியல் பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா. தமிழக ஆளுநர் புரோஹித், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அமைச்சர் செல்லூர் ராஜு, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இப்படி ஒரு நிலையில் காமெடி நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவரும், எம் எல் ஏவுமான கருணாஸிற்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் கருணாஸ் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அந்த வீட்டின் பாதுகாவலராக இருந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நடிகர் கருணாஸிற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவையடுக்கும் நடிகர் கருணாஸிற்க்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement