நடிகரும் பிரபல ஆர் ஜேவுமான மிர்ச்சி விஜய்க்கு குழந்தை பிறந்தது.

0
13550
mirchi
- Advertisement -

பிரபல Fm தொகுப்பாளர் மிர்ச்சி விஜய்க்கு குழந்தை பிறந்தது. ரேடியோ மிரச்ச்சி FM சேனலில் ஆர்ஜேவாக இருந்து வந்து பலருக்கும் பரிட்சயமான குரல் இருக்கிறது அவரது குரல்! ரேடியோ மிர்ச்சி Fm-ல் ஆர் ஜேவாக பலரின் மனதை கொள்ளை கொண்ட மிர்ச்சி விஜய் பின்னர் தொலைக்காட்சியிலும் கலக்கினார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கி விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஆர் ஜி விஜய். 

-விளம்பரம்-

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ இவரது ஆங்கரிங் ஸ்டையில் பலருக்கும் பிடித்தது. அதன் பின்னர் இவர் பல்வேறு விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றினார். அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட இவர் தொகுப்பாளராக பணியாற்றினார். மிர்ச்சி விஜய்க்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது.

- Advertisement -

இரண்டு வருடமாக காதலித்து வந்த மோனிகா என்கிற பெண்ணை தான் மிர்ச்சி விஜய் திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திற்கு முன்னர் மிர்ச்சி விஜய் அளித்த பேட்டியில், அவங்க என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட். நான் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம். நல்ல நண்பர்களாக எங்களுடைய பயணம் தொடர்ந்துச்சு. இரண்டு வருஷமா காதலிக்கிறோம். இப்போ காதல், கல்யாணத்தை எட்டியிருக்கு என்றார்.

இவர்களது திருமணம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா ஸ்னேஹா, ரியோ ராஜ், கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மிர்ச்சி விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மிர்ச்சி விஜய்.

-விளம்பரம்-

Advertisement