உலகில் அளவில் ரசிகர்கள் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனாலே படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண் என்று பலர் நடிக்கின்றனர்.மேலும், விஜய்யின் நண்பர்களும் நடித்துள்ளனர். தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே நண்பர்களாக இருந்தவர்கள் இருந்தவர்கள் நடிகர் ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத். மூவரும் விஜய் அவர்களுடன் அந்த காலம் தொட்டு நண்பராக இருந்து வருகிறார்.
இதில் ஸ்ரீமண் மற்றும் சஞ்சீவ் விஜய்யின் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். அதே போல ஸ்ரீநாத், விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலும் வேட்டைக்காரன் படத்திலும் நடித்துள்ளார்.மேலும், ஸ்ரீமன் விஜய் நடத்த லவ் டுடே துவங்கி பைரவா படம் வரை விஜய்யுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒரு சக நடிகர் என்பதை விட இவர் விஜய்யின் நண்பர் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு விஜய் பற்றிய பல விஷயங்கள் இவருக்கு தெரியும்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் க்யூட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீமன், அதில் நீங்க வேற லெவல் நண்பா, செம க்யூட். வெறும் விஜயின் க்யூட் எக்ஸ்பிரஷனுக்காக மட்டும் இந்த வீடியோவை நான் பகிரவில்லை . இதை எனது நண்பரின் ஸ்டேட்டஸில் பார்த்தேன். இதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு பாஸிடிவிட்டி கிடைக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு அனைவரும் எஸ்பிபி சாருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஒன்றிணையுங்கள். விரைவில் கொரோனா இல்லாத உலகை அடைவோம் என்று கூறியிருக்கிறார்