தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் அர்ஜுன். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் தான் நடித்து உள்ளார். அதனால் இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார் .இவர் நடிகர் மட்டும்மில்லாது இயக்குனர், தயாரிப்பாளர், வசன எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். அர்ஜுன் அவர்களின் திரைப்பயணத்தில் முதல்வன், ரிதம், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் போன்ற பல படங்கள் மைல்கல்லாக அமைந்தது
மேலும், அர்ஜுன் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவருடைய படம் என்றாலே அதிரடி, ஆக்ஷன் ஆக தான் இருக்கும். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தந்தையும் ஒரு பிரபலமான முன்னணி நடிகர் தான்.
அர்ஜுனின் தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஆவார். இவர் பெரும்பாலும் கன்னட மொழி படங்களில் தான் நடித்துள்ளார். கன்னட மொழியில் மிகப் பிரபலமான முன்னணி நடிகராக திகழ்ந்தவர். கன்னட மொழியில் 20 வருடங்களுக்கு மேல் 200 படங்களுக்கு அதிகமாக நடித்துள்ளார். தற்போது நடிகர் அர்ஜுனின் தந்தை புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது லாஸ்லியா, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ஷிப் படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படமும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃப்ரெண்ஷிப் படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.