கலைஞர் குடும்பத்தில் அடுத்த வாரிசு – மீண்டும் அப்பாவானார் உதயநிதி. என்ன குழந்தை தெரியுமா ?

0
679
arulnathi
- Advertisement -

உதயநிதி பிறந்தநாள் அன்றே அவருடைய தம்பி வீட்டில் குட்டி தேவதை வந்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருள்நிதி. இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் உதயன், மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், சமீப காலமாக இவருடைய சில படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இருந்தாலும், இவர் தன்னுடைய விடா முயற்சியினால் படங்களில் நடித்து வருகிறார். மேலும், அருள்நிதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அருள்நிதி 2015ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிழ் என்ற ஒரு மகன் இருக்கிறான்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது அருள்நிதி மீண்டும் அப்பாவாகி இருக்கிறார். அருள்நிதி மனைவி கீர்த்தனா அவர்கள் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்திருக்கிறார். பின் கீர்த்தனாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மேலும், மீண்டும் தந்தையான சந்தோஷத்தில் அருள்நிதி ரசிகர்களுக்கு டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எங்கள் குட்டி தேவதையை வரவேற்கிறோம். 27/ 11/ 2021 அன்று தான் பிறந்தார் என்று கூறுகிறார்.

இதனை பார்த்து முதல் ஆளாக நடிகர் பிரசன்னா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இவரை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இதைப் பார்த்த ரசிகர்கள் உதயநிதி அண்ணாவின் பிறந்த நாளன்று குட்டி தேவதை பிறந்து இருக்கிறார். இனிமேல் ஆண்டுதோறும் ஒரே நாளில் டபுள் கொண்டாட்டம் தான் என்று அருள்நிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement