பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை பார்க்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத் திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அருண். இவர் பூவே உனக்காக சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் அருண். சன் டிவியில் வெற்றிகரமாக செல்லும் சீரியல்களில் ஒன்றாக பூவே உனக்காக சீரியல் திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக பல எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது.
பூவே உனக்காக சீரியல் :
இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் அருணும் நாயகியாக ராதிகா ப்ரீத்தி என்பவரும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் நடித்து வந்தனர். அதில் ஒரு நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா நடித்து இருந்தார். முதலில் சீரியலில் இருந்து ஜோவிகா விலகி இருந்தார். இதுகுறித்து அவர், தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்ததை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.
சீரியலில் இருந்து விலகிய அருண்:
முதல் சீரியலிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தார். பின் திடீரென்று இவர் சீரியலில் விலகியதை தொடர்ந்து ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கதிர் கதாபாத்திரத்தில் அசிம் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலுக்கு பிறகு அருண் வேறு எந்த சீரியலில் நடிக்கவில்லை. அதேபோல் சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து இருந்த ராதிகா ப்ரீத்தி நடித்து இருந்தார். தற்போது வேறு நடிகை சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நடிக்கும் சீரியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,
நம்ம வீட்டு பொண்ணு
தற்போது நடிகர் அருண் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கும் நம்ம வீட்டு பொண்ணு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் தொடர் நம்ம வீட்டு பொண்ணு. இந்த தொடர் 2021ஆம் நடித்து ஆகஸ்ட் மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப் பட்டது. இந்த தொடர் ஜல்சா என்ற வங்காள மொழி தொடரின் மறுஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்றுகொண்டிருக்கின்றது.
ரீ-என்ட்ரி கொடுக்கும் அருண்:
இந்த நிலையில் இந்த சீரியலில் அருண் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த தொடரில் பல பிரபலமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இந்த தொடரின் மூலம்அருண் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரின் முதல் எபிசோட் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இது குறித்து அருண் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடரந்து அருண் நடிக்கும் கதாபாத்திரம் என்ன? எந்த ரோலில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.