படு ஸ்லிம், படு கிளாமர் – இனியாவின் லேட்டஸ்ட் Transformation. வைரலாகும் புகைப்படம்.

0
3935
iniya
- Advertisement -

தமிழ் சினிமாவில் பப்லியான நடிகைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி கவனம் உண்டு. குஷ்பு துவங்கி ஹன்சிகா வரை எத்தனையோ பப்லியான நடிகைகள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து உள்ளனர். ஆனால், சமீப காலமாகவே நடிகைகள் மத்தியில் ஒல்லியான உடல் அமைப்பிற்கான கவர்ச்சி மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து தனது பப்லி லுக்கை இழந்தார்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பப்லி நடிகையாக அறிமுகமான நடிகை இனியாவும் அதே ரூட்டை பின் தொடர்ந்து வருகிறார். பொதுவாக இந்தி சினிமாவில் தான் நடிகைகள் தங்களது உடல்களை ஒல்லியாக வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருவார்கள். ஆனால், சமீப காலமாக ஒல்லியாக உடல் அமைப்பை வைத்து வரும் கலாச்சாரம் தமிழ் நடிகைகளையும் தொற்றிக்கொண்டு உள்ளது.

இதையும் பாருங்க : Sun proof-அ ஓபன்ல விட்டு டான்ஸ் ஆடினு போனாங்க, எல்லாரும் போதை – விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன ஷாக்கிங் தகவல்.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் பூசலான உடல் எடையுடன் வந்த சில நடிகைகள் கூட தற்போது ஒல்லியாக மாற உடற் பயிற்சிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான இனியாவும் இதே லிஸ்டில் சேர்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார் இனியா. அந்த படத்திற்கு பின்னர் இவர் “மௌனகுரு” படத்தில் நடித்திருந்தார்.

அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் தாராளமாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சமீப காலமாக படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வரும் இனியா சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement