சமீப காலமாக டெக்னீக்கலாக வரி ஏய்ப்பு செய்வது அதிகமாகிவிட்டது. பாண்டிச்சேரிக்கு பக்கத்து மாநிலங்களில் உள்ளவர்கள் அங்கு சென்று அங்கு இருக்கும் ஒரு பொய்யான ஒரு முகவரியை வைத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்குவது வாடிக்கை ஆகிவிட்டது.
சமீபத்தில் நடிகை அமலா பால் அப்படித்தான் பாண்டிசேரியில் சென்று கார் வாங்கி அதனை தனது மாநிலமான கேரளாவில் பயன்படுத்தி வந்தால் அது ஒரு சர்ச்சை ஆனது. ஆனால் சட்டப்படி நான் ஒன்றும் தவறு செய்துவிடவில்லை எனக் கூறிவிட்டார் அமலாபால்.

தற்போது அதே போன்ற ஒரு கேஸில் இன்று பிரபல மலையாள நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகாத் பாஸில் கேரளா கிரைம் பிரான்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் 50,000 பிணைத்தொகை, மற்றும் இரண்டு பேரின் ஜாமீன் கையெழுத்துடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பாண்டிசேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் ₹ 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் விலையுள்ள கார்களை வாங்கினால் 20% வரி குறைவாக சொகுசு கார் கிடைக்கும். ₹ 1 கோடி மதிப்பிலான காரை வாங்கும் போது ₹ 20 லட்சம் சேமிக்கலாம். ஆனால், பாண்டிசேரியில் வீட்டு உள்ள ஒரு முகவரியை தர வேண்டும்.

Advertisement

இதற்காக பல பிரபலங்கள் கார் வாங்குவதற்கென அங்கு சின்ன சைசில் ஒரு சின்ன ரூம் வாங்கி அதனை தன் வீடு எனக் கூறி அந்த முகவரியை காட்டி சொகுசு பல கார்களை வாங்கி 20% வரியை காட்டாமல் தங்கள் மாநிலத்திற்கு எடுத்து சென்று பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் கேரளா அரசிற்கு கடந்த 5 வருடத்தில் ₹ 300 கோடி வரியிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால், இப்படி நூதனமாக வரி ஏய்ப்பு செய்யும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கேரளா கிரைம் பிரான்ச் போலீசிற்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக இன்று பகாத் பாஸில் கைது செய்யட்டுள்ளார். இதே காரணத்தால். இன்னொரு கேரள நடிகர் மற்றும் எம்.பி சுரேஷ் கோபி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் பீதியான அமலாபால் தற்போது முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நடிகர் பகாத் பாஸில் தேசிய விருது வென்ற நடிகர் ஆவார். தற்போது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிவாகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழிலும் தனது காலை பதித்துள்ளார்.

Advertisement
Advertisement