ரஜினி மற்றும் கமலை தொடர்ந்து தற்போது தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் பாக்யராஜ். நடிகரும் இயக்குனருமான இவர் எம்.ஜி.ஆர் காலம் முதல் அதிமுகவில் இருந்து வருபவர். தற்போது மீண்டும் அதிமுக கட்சியில் சேர போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார். மேலும், எம்.ஜி.அவருக்கு மிகவும் பிடித்த இரு நடிகர் ஆவார். இதன் காரணமாக ‘நான் வாத்தியாருடன் தான் இருப்பேன்’ என இளம் வயதில் இருந்தே அதிமுகவில் இருந்து வருகிறார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் நோயினால் அவதிப்பட்டு அமெரிக்கா மருத்துவமனையில் இருந்தபோது, அதிமுகவிற்காக தமிழகத்தில் தீவிரமாக உழைத்தவர் பாக்யராஜ். அந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் அந்த அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்த பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாக்யராஜ் அதிமுகவில் இணைந்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய அந்த கட்சிக்காக பாடுபடபோவதாக அறிவித்துள்ளார்.