‘இனி உன் வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்’- மகளின் குற்றச்சாட்டுக்கு நடிகர் பாலா போட்ட உருக்கமான பதிவு

0
361
- Advertisement -

தன்னுடைய மகள் குறித்து எமோஷனலாக நடிகர் பாலா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்று விட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார்.

- Advertisement -

பாலாவின் திருமண வாழ்க்கை:

இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை விவாகரத்து செய்தார். பின் இவர் 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மருத்துவரான எலிசபெத் என்றவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்துள்ளது.

பாலா மகள் போட்ட வீடியோ:

இந்த நிலையில் நடிகர் பாலாவின் மகள் அவந்திகா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர்,என்னுடைய அப்பா என்னை ரொம்ப நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும், எனக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கி தந்ததாகவும் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், அதில் எதுவுமே உண்மை கிடையாது. என்னுடைய அப்பாவை நேசிக்க எனக்கு ஒரு சின்ன காரணம் கூட கிடையாது.

-விளம்பரம்-

தந்தை குறித்து சொன்னது:

அவரை நினைக்கும் போது எனக்கும், என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களையும் டார்ச்சர் செய்தது, குடித்துவிட்டு என்னுடைய அம்மாவை அடித்தது தான் என் கண் முன் வருகிறது. அந்த நேரத்தில் என் அம்மாவிற்கு என்னால் உதவ முடியவில்லை. ஆனால், அந்த வலியை என்னால் இப்போது உணர முடிகிறது. என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். தயவுசெய்து என் வாழ்க்கையில் குறிக்கிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது பாலா பதிவு ஒன்று வெளியிடுகிறார்.

பாலா வீடியோ:

அதில் அவர், மகளே முதலில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவர் மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே கிடையாது. நான் உன் வாழ்க்கையில் குறிக்கிடமாட்டேன். நீ ஐந்து மாத கருவாக வயிற்றில் இருக்கும்போதே நான் உனக்கு அவந்திகா என பெயர் வைத்து அழகு பார்த்தவன். உன் சின்ன சின்ன ஆசைகளை நான் ரசித்து மகிழ்ந்தேன். நீ எப்போதுமே எனக்கு குழந்தை தான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Advertisement