பாகுபலி படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எத்தனையோ தெலுங்கு படங்கள் நேரடியாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி வருகிறது. பாகுபலி பிரம்மாண்டத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் தற்போது ராஜமௌலி இயக்கிய RRR படம் மிகப்பெரிய வெற்றியை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், இந்த படத்தில் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளார்கள்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR :
இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. அதோடு சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
சூப்பர் ஹிட் அடித்த பாடல் :
அதிலும் குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. மேலும், இந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr-ன் நடனத்தை பார்த்து ஆடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இந்த பாடலை பலரும் இன்ஸ்டாகிராம் reelsகளை கூட செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் பரத்தின் மகன்களும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கின்றனர்.
பரத்தின் ட்வின்ஸ் மகன்கள் :
தமிழ் சினிமாவால் சின்ன தளபதி என்று பட்டப் பெயரை கொண்டவர் பரத். தமிழில் சங்கரின் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின்னர், செல்லமே, காதல், பட்டியல், வெயில் உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார்.சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பரத், ஒரு சர்வதேச நடன பள்ளியில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார்.
இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . ஜெஸ்லி துபாயில் பிறந்தவர். அங்கு படித்து பட்டம் பெற்ற பல் மருத்துவர் ஆவார்.பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் 5 வருடங்களாக குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த நடிகர் பரத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.
RRR பாடலுக்கு ஆட்டம் :
தற்போது இந்த ட்வின்ஸ் மகன்களுக்கு 4 வயது ஆகப்போகிறது. இப்படி ஒரு நிலையில் பரத் மகன்கள் இருவரும் RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலை டிவியில் கண்டு நடனமாடும் வீடியோ ஒன்றை பரத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போதே அப்பவை போல நடனமாட துவங்கிவிட்டனரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.