வடிவேலுவால் 18 நாள் சும்மா இருந்தேன், 60,000 வீனா போச்சி, என் காட்சிய கூட நீக்க சொன்னாரு – வெற்றிகொடிகட்டு பெஞ்சமின்.

0
25506
benjamin
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு என்று பலரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

இந்த நிலையில் வடிவேலுவுடன் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் பெஞ்சமின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், பாலச்சந்தரின் நாடகத்திற்கு தலைமை தாங்க சேரன் வந்த போதுதான் எனக்கு வெற்றி கொடி கட்டு படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் ஷூட்டிங்கிற்காக நான் சேரனை முதல்நாள் சந்தித்தபோது அவர் என்னை ஒரு மரத்திற்கு அருகில் சேர் போட்டு அமர சொன்னார். முதல்நாள் அன்று என்னை வைத்து காட்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இப்படியே 18 நாட்கள் சென்றது பின்னர் இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று சொன்னார்கள். இதனால் சேரனிடம் சென்று நான் ஊருக்கு போகிறேன் என்று சொன்னேன்.ஆனால் அவரோ, வடிவேலு வராததால் தான் உங்களின் காட்சிகளை எடுக்க முடியவில்லை நாளை வடிவேலு வருகிறார் உங்கள் காட்சிகளை எடுக்கலாம் என்று சொன்னார்.

- Advertisement -

அதற்கு ஏற்ற மாதிரி அடுத்த நாள் வடிவேலுவும் வந்தார். மேலும் என்னை பார்த்து இவன் தான் புது பையனா ஒழுங்கா நடிப்பயா? பயப்படகூடாது என்று என்னிடம் கேட்டார் அதற்கு நான்’நான் பாலச்சந்தர் பள்ளியின் மாணவர் அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை’ என்றுசொன்னேன். பின்னர் என்னுடைய காட்சி படமாக்கப்பட்டது. சேரன் சாரோ படத்தின் பட்ஜெட்டை குறைப்பதற்காக 400 அடி ரீல் rs.15000 எனவே ஒரே டேக்கில் முடித்து விடு என்று என்னிடம் சொன்னார். நானும் நடிக்க தயாரானேன்.பின்னர் வசனத்தை பேசி கொண்டே வரும்போது வடிவேலுவை திட்ட வேண்டும். ஆனால் அவரை திட்டும் போது அவர் என்னை வசனம் பேச விடாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படியே 4 ரீல்கள் முடிந்தது இதனால் ஆத்திரமடைந்த சேரன் 60,000 ரூபாயை போய்விட்டது என்று சொன்னார். பிறகு ஏன் கெட்ட வார்த்தையில் திட்ட யோசிக்கிறீங்க ? என்று சேரன் கேட்டதும் நான் வடிவேலு கேமராவுக்கு பின்னால் செய்வதை சேரிடம் கூறினேன்.

இதைப்பார்த்த பார்த்திபன் வடிவேலுவை அழைத்து சென்று காரில் கொஞ்ச தூரம் சென்று வர சொன்னார். பின்னர் அந்த காட்சியில் வடிவேலுவை நீ என்னவெல்லாம் திட்ட நினைக்கிறாயோ அதை திட்டு என்று பார்த்திபன் சொன்னார். அதன் பின்னர்தான் அந்த காட்சி நன்றாக வந்தது.அதன் பின்னர் வடிவேலு என்னிடம் வந்து என்னை என்னையா திட்ன , எப்படி நீ ஊருக்கு போகிறேன் என்று நான் பார்க்கிறேன் என்று சொன்னார். பின்னர் அங்கு இருந்த சேரனும் பார்த்திபனும் வடிவேலுவை சமாதானம் செய்தார்கள் .அதன் பின்னர் அந்த காட்சியை வடிவேலு பார்த்துவிட்டு இப்படி எல்லாம் என்னை திட்டி இருக்கிறானோ அந்த காட்சியை நீக்கி விடுங்கள் என்று சொன்னார். ஆனால் சேரனோ, இல்லை ஏற்கனவே படத்தின் நீளத்தின் காரணமாக பல காட்சிகளை நீக்கி விட்டேன் அதனால் இந்த காட்சி இருக்கட்டும் என்று எவ்வளவோ சமாதானம் செய்து அந்த காட்சியை படத்தில் வைத்தார்.ஆனால் அந்த காட்சி தான் எனக்கு ஒரு அடையாளமாக அமைந்தது என்று கூறியுள்ளார் பெஞ்சமின்.

-விளம்பரம்-
Advertisement