2007ம் ஆண்டு வெளிவந்த படம் ‘கல்லூரி’. இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி ஷங்கர் தயாரித்திருந்தார்.
தமிழில் தமன்னாவிற்கு இது மூன்றாவது படம். அறிமுக நாயகர்களாக அகில், பரணி ஆகியோர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தனர். இந்தப் படத்தில் அறிமுகமாகி, இன்று மக்களுக்கு பரிட்சயமான நடிகர் பரணியிடம் இந்தப் படத்தில் பயணித்த அனுபவம் பற்றி கேட்டோம்.

படத்தோட ஷூட்டிங் 55 நாள் நடந்துச்சு. அங்க என் டைரக்டர் பாலாஜி சக்திவேல் சார் சொல்லிக்கொடுத்த விஷயங்கள்தான் இன்னும் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. அந்தப் படத்தோட அனுபவம் மறக்கவே முடியாது. தமன்னா இப்போ பெரிய இடத்துக்குப் போய் கலக்கிட்டு இருக்காங்க.
அவங்க என்னை எங்க பார்த்தாலும் இன்னைக்கும் ‘ரமேஷ்’னு அந்தப் பட கேரக்டரைச் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. ஒரு முறை நான் இன்னொருத்தரை அடிச்சு இழுக்கிறதுதான் சீன். அப்போ நான் மாத்தி தமன்னா தோள்ல அடிச்சுட்டேன்.

Advertisement

அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர் எல்லாரும் ‘படத்தில இருந்து உன்னை தூக்கப்போறாங்க. அவ்வளவுதான்’னு சொல்லி என்னை பயமுறுத்திட்டாங்க. அதை நினைச்சுப்பார்த்தா இன்னும் பயமா தான் இருக்கும். அப்புறம், நான் தமன்னாகிட்ட போய், ‘சாரி தம்ஸ்… தெரியாம மாத்தி அடிச்சுட்டேன்’னு சொன்னேன். அவங்களும் ‘இல்லை ரமேஷ். நான்தான் தப்பா நின்னுட்டேன். பரவாயில்லை’னு பெருந்தன்மையா நடந்துக்கிட்டாங்க.

Advertisement