பலருக்கும் உதவி வரும் பிளாக் பாண்டியிடம் பேசாமல் போன Sk, இது தான் பிரச்சனையாம். அவரே சொன்ன வீடியோ இதோ.

0
464
sk
- Advertisement -

தமிழ் சினிமாவில் விவேக் வடிவேலு போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் பிளாக் பாண்டி இதை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிளாக் பாண்டி. சினிமாவில் காமெடியனாக இருக்கும் இவர் நிஜத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் ஒரு ஹீரோவாக தான் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கஷ்டப்படும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்துவருகிறார். இவரது அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து கை கொடுத்து வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி.உதவும் மனிதம் அமைப்பின் மூலம் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களைத் தேடிச் சென்று உணவளித்து வருகிறார்.

- Advertisement -

உதவும் மனிதம் அமைப்பு :

அத்துடன் படிப்பு செலவு, மருத்துவ செலவு, இறுதிச் சடங்கிற்குகூட வசதி இல்லாமல் கஷ்டப்படும் பல குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆனால், இவர் இதுவரை அதனை பெரிதாக விளம்பரப்படுத்தியது கிடையாது. சமீபத்தில் கூட இலங்கையில் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து இலங்கை மக்களுக்கு நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

சிவகார்த்திகேயன் குறித்து பிளாக் பாண்டி :

இதை குறிப்பிட்டு இலங்கை அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி இருந்தார் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இப்படி பல உதவிகளை செய்து வரும் பிளாக் பாண்டியிடம் சிவகார்த்திகேயன் பேசுவது இல்லை என்பது கஷ்டமான விஷயம் தான். பிளாக் பாண்டி சிவகார்த்திகேயன் குறித்து பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அதில் பேசியுள்ள அவர் ‘சிவகார்த்திகேயனும் நானும் வீட்டில் இருந்தபோது நண்பர்கள்தான் இன்னமும் கோயம்புத்தூரில் இருக்கும் கல்பனா ஸ்டூடியோவில் நாங்கள் எடுத்த போட்டோ இருக்கும் என்று கூறி இருந்தார். அப்போது தொகுப்பாளர், இன்னமும் பேசுகிறீர்களா என்று கேட்டதற்கு ‘இல்ல, பாக்கும் போது பேசுவோம். இப்போ அவர் பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிறார். இடையில் நான் மிகுந்த கஷ்டபட்டு கொண்டிருந்த காலத்தில் சிவாவுடைய மேமேஜர், காசு எடுத்துகொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.

பேசுவதை நிறுத்தியுள்ள Sk :

ஆனால், நான் காசு வேண்டாம், படத்துல கேரக்டர் இருந்தா குடுங்க என்று அந்த காஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த மேனேஜர் சிவாவிடம் போய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதில் இருந்து என்னிடம் அவன் சரியாக பேசுறது இல்லை. அதற்கு நான் வருத்தப்பட்டது இல்லை என்று கூறியுள்ளார் பிளாக் பாண்டி. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement